search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் அருகே டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து சூறையாடிய என்ஜினீயரிங் மாணவர்கள்
    X

    திருப்பூர் அருகே டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து சூறையாடிய என்ஜினீயரிங் மாணவர்கள்

    திருப்பூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
     திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த கோவில்வழி அய்யம் பாளையம் மகாலட்சுமி நகர் பின்புறத்தில் கடந்த 14-ந் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. முதல் நாளில் வியாபாரம் நடந்தது.

    பின்னர் சுதந்திர தினத்தையொட்டி நேற்று கடை மூடப்பட்டது. இதனால் கடையில் குறைந்த அளவில் மட்டுமே மதுபாட்டில்களை இருப்பு வைத்து விட்டு ஊழியர்கள் சென்றிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் ஆஸ்பெஸ்டாஸ் சீட், மற்றும் சுவரை இடித்து நொறுக்கினர்.

    அப்போது சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த சிலர் இதுபற்றி திருப்பூர் ரூரல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    போலீசாரை கண்டதும் 4 பேர் தப்பி ஓடி முயன்றனர். ஆனால் போலீசார் விடாமல் துரத்தி சென்று 3 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருப்பூர் வீரபாண்டி கள்ளக்காடு பகுதியை சேர்ந்த கோபிநாத் (வயது 20), பார்த்திபன் (21), மணிகண்டன் (19) ஆகியோர் என தெரிய வந்தது.

    இதில் பார்த்திபன், மணிகண்டன் ஆகிய 2 பேரும் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×