search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் ஆதாரம் சமர்பிக்க தயார் - ஜெயானந்த் திவாகரன்
    X

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் ஆதாரம் சமர்பிக்க தயார் - ஜெயானந்த் திவாகரன்

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டால் அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்படும் என சசிகலாவின் உறவினர் ஜெயானந்த் திவாகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டால் அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்படும் என சசிகலாவின் உறவினர் ஜெயானந்த் திவாகரன் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் நேற்று முந்தினம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என தினகரன் பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பொதுக்கூட்டம் நடத்தியது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், சசிகலாவின் உறவினரான ஜெயானந்த் திவாகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு போட்டியளித்துள்ளார். அதில், ”ஜெயலலிதா சிகிச்சை குறித்த 100 சதவிகித ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. நீதி விசாரணை நடத்தப்படும் பட்சத்தில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமர்பிக்கப்படும். முதலமைச்சர் பழனிசாமி விருப்பப்பட்டால் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணைக்கு உத்தரவிடலாம்” என கூறியுள்ளார்.

    மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி சசிகலாவிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், பணம் கொடுத்து மேலூர் பொதுக்கூட்டத்தை நாங்கள் கூட்டவில்லை என்றும் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×