search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை சுதந்திர தினம்: புதுவை தலைவர்கள் வாழ்த்து
    X

    நாளை சுதந்திர தினம்: புதுவை தலைவர்கள் வாழ்த்து

    நாளை சுதந்திரதினத்தையொட்டி புதுவை தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    நாளை சுதந்திரதினத்தையொட்டி புதுவை தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

    சபாநாயகர் வைத்திலிங்கம்:- நமது தேசத்தலைவர்களிடம் இருந்து எளிமை, பொறுமை, சகோதர மனப்பான்மை, தாய் நாட்டுப்பற்று, நமது தேசத்தை வல்லரசாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகிய அனைத்து மாணவர்கள் இளைஞர்கள் மனத்தில் கொண்டு செல்ல இந்த சுதந்திர நாளில் நாம் அனைவரும் சபதமேற்போம், நமது புதுவை மாநில மக்கள் மதச்சார்பு என்னும் மாயவலைக்குள் சிக்குண்டு தவிக்காமல், வேற்று மையிலும் ஒற்றுமை கொண்டு சகோதர மனப்பான்மையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமைச்சர் நமச்சிவாயம்:- வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் நம்தேசத்தில் மதத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்வோரை நாம் புறம் தள்ளவேண்டும். அரசியல் சுயலாபத்திற்காக மக்களிடம் பேதைமையை உருவாக்கும் தீய சக்திகளுக்கு பாடம் புகட்டவேண்டும். நாட்டு மக்கள் நலனுக்காக தேசப்பற்றுடன் சகோதர மனப்பான்மையுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

    தியாக தலைவர்கள் பெற்று தந்த சுதந்திரத்தை காத்து நின்று சூழ்ச்சிகளை எதிர்கொண்டு வளர்ச்சிமிகு இந்தியாவை உருவாக்க அன்னை சோனியா காந்தி, இளந்தலைவர் ராகுல் காந்தி காட்டும் தூய பாதையில் பயணிப்போம். வளமான, வலிமையான, வளர்ச்சிமிக்க இந்தியாவை உருவாக்க இந்த சுதந்திர திருநாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் எனது இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அமைச்சர் கந்தசாமி:- இந்தியாவின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் இன்றியமையாதது. புதுவை மாநில மக்களாகிய நாம் சுற்றுச்சூழல், தனி மனித ஒழுக்கம், அறிவுசார் முன்னேற்றம், தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட அனைத்து வழியினங்களிலும் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்போம் என 2017-ம் ஆண்டின் சுந்திர நாளில் உறுதியேற்போம்.

    நாட்டின் இந்த 71-வது சுதந்திர தின நன்னாளில், நாம், பெற்ற சுதந்திரத்தை ஒவ்வொருவரும் முழுமையாய் அனுபவிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை வரைந்த டாக்டர் அம்பேத்காரை, தியாகப் பெருமக்களையும், தன்னலம் கருதாத முன்னோடி தலைவர்களையும் அறிவியலாளர்களையும், விவசாய பெருமக்களையும் பணிந்து அன்னை சோனியாவின் நல்லாசியுடன் சாதனை பயணத்தை தொடர்வோம்.

    அமைச்சர் ஷாஜகான்:- பாரத தாய் திருநாட்டின் 71-வது சுதந்திர தின விழாவை தேசப் பற்றோடு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நமது இந்திய நாட்டு மக்களுக்கும், புதுவை மாநில மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப் பதில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். சுதந்திரம் பெற அரும்பாடுபட்ட தேசத் தலைவர்களையும், தியாகிகளையும், இந்த தருணத்தில் நினைவில் கொண்டு அவர்களை போற்றி வணங்குவோம்.

    மதசார்பற்ற, மனித நேயத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது கடமையாற்ற இந்த சுதந்திர திருநாளில் சபதமேற்போம், வாழ்க நாடு, வளர்க நாட்டின் பொருளாதாரம் வெல்க இந்தியர்களின் ஒற்றுமை என்று கூறி மீண்டும் ஒரு முறை என் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

    ராதாகிருஷ்ணன் எம்.பி.:- இந்நன்னாளில் இந்திய சுதந்திரத்தின் மேன்மைகளை காத்திட, நம் புதுவை மாநிலம் வளம் காண, பெண் சுதந்திரம் காக்கப்பட, தூய்மையான புதுவை உருவாகிட, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் காத்திட, குடிநீர் பாதுகாக்கப்பட, எதிர்கால தேவையைக் கருதி மழைநீரை சேமித்திடவும், விவசாயம் செழித்திடவும், தொழில்வளம் பெருகவும் சபதமேற்போம்.

    இத்தருணத்தில் புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை ஒரு முறை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    கோகுலகிருஷ்ணன் எம்.பி.:- புதுவை மாநிலத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இனிய இந்தியாவின் 71-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    பாரதநாட்டின் குடிமகன் என்ற பெரும் பாக்கியத்தை பெற்ற நாம் நம் தாய்திருநாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடையவும், மேலும் பரிமளிக்க நாம் அனைவரும் நம் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு ஒருதாய் பிள்ளைகளைப் போல் ஒன்றிணைந்து தாய் திருநாட்டின் பெருமைகளை காப்போம்.

    அன்பழகன் எம்.எல்.ஏ.:- புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த 71-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

    பல்வேறு மதத்தினரும், பல மொழி பேசும் மக்களும் வாழும் நமது நாட்டில் ஒற்றுமை, தேசப் பற்று, மதச் சார்பின்மையை தொடர்ந்து கடைபிடித்து சுதந்திரத்தின் மாண்பை நிலை நிறுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து இளைஞர்கள் அனைவரும் தேசப் பற்றுடன் சுதந்திர இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
    Next Story
    ×