search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பாக பணியாற்றிய 16 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    சிறப்பாக பணியாற்றிய 16 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    சிறப்பாக பணியாற்றிய 16 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்டகாவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்:

    1.கே.வீரமணி, காவல் கூடுதல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம். 2.அசோக் நடராஜன், காவல் துணை கண்காணிப்பாளர், பொருளாதாரகுற்றப் பிரிவு, சென்னை. 3..சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், மதுரை மத்தியகுற்றப் பிரிவு. 4.நாகராஜன், காவல் ஆய்வாளர், சேலம் அம்மாபேட்டை காவல்நிலையம், 5.உமாதேவி, காவல்ஆய்வாளர், குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை, சென்னை. 6.ஆ.சிவ ஆனந்த், காவல்ஆய்வாளர், குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, சென்னை. 7.ஜே.அன்புபிரகாஷ், காவல் ஆய்வாளர், வள்ளியூர். 8. பார்த்திபன், காவல் ஆய்வாளர், நத்தம். 9.ஜே.மலர் கொடி, காவல் ஆய்வாளர், பெரம்பலூர். 10.சுந்தர மூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர், திருச்சி.

    இதேபோன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்தபொதுச் சேவைக்கான தமிழக முதல்- அமைச்சரின் காவல்பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    1.கே.ஜெயந்த் முரளி, கூடுதல் காவல்துறை இயக்குநர், குற்றப் புலனாய்வு துறை. 2.சி.ஈஸ்வர மூர்த்தி, காவல்துறைத் தலைவர், நுண்ணறிவுப் பிரிவு. 3.மயில்வாகணன், காவல் துணை ஆணையர். 4.சந்திர சேகரன், காவல் துணை கண்காணிப்பாளர், ஓமலூர். 5.எஸ். விஜயன், காவல்ஆய்வாளர், பெரியநாயக்கன்பாளையம். 6.சுதா, முதல்நிலை பெண் காவலர்1565, விழுப்புரம் இருப்புப்பாதை காவல் நிலையம்.

    விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள். மேற்கண்ட விருதுகள், முதல்-அமைச்சர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்சொன்னகாவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×