search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு கிரண்பேடி ஆதரவு
    X

    புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு கிரண்பேடி ஆதரவு

    புதுச்சேரியின் மந்திரிகள் ஒவ்வொரு வாரமும் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டுமென முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். அவரது முடிவிற்கு கிரண்பேடி ஆதரவு தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கு இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. இருவரும் மாறி மாறி விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

    இதனிடையே, புதுச்சேரி மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஒவ்வொரு வாராமும் தொகுதிகளுக்கு சென்று கட்சி பாகுபாடின்றி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அந்த இடத்திலேயே சரிசெய்ய வேண்டும் என முதல்வர் நாராயணசாஅமி நேற்று அறிவித்தார். இந்த சந்திப்பு அடுத்த வாரம் முதல் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

    இந்நிலையில், முதல்வர் நாராயணசாமியின் இந்த முடிவிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநரான கிரண்பேடி தனது ஆதரவை அளித்தார். இன்று, வாட்ஸ் ஆப் மூலம் தனது ஆதரவு செய்தியை கிரண்பேடி தெரிவித்தார்.

    கிரண்பேடி கூறியதாவது:-

    ”மக்களை நேரில் சந்திக்கும் யோசனையை கடந்த ஆண்டு மே மாதம் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து நாம் கூறி வந்தேன். தற்போது அந்த முடிவெடுத்துள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கு நன்றி. இதன்மூலம் தொகுதியை சுத்தமாக வைத்து கொள்ள முடியும்.

    அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிய முடியும். மாதத்திற்கு ஒரு முறை மக்கள் கூட்டங்கள் நடத்தி மக்களின் குறைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிய வேண்டும்.

    இதன்மூலம், புதுச்சேரி, தூய்மையான, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். இந்தியாவை மாற்றுவதற்காக, பொது அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தினசரி மக்களின் தேவைகளுக்கும் குறைகளையும் கேட்டு சரிசெய்ய செய்ய வேண்டும்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×