search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் காய்கறி வியாபாரியிடம் நகை பறிப்பு
    X

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் காய்கறி வியாபாரியிடம் நகை பறிப்பு

    குளிர்பானத்தில மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் காய்கறி வியாபாரியிடம் நகையை பறித்த தட்டுவண்டி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே சன்னியாசிக்குப்பம் காந்திநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவருடைய மனைவி சகுந்தலா (வயது36). இவர் மூலக்குளம் அருகே பிச்சைவீரன்பேட்டில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் அதிகாலை பெரியமார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்கி அதனை தட்டுவண்டியில் வைத்து பிச்சைவீரன்பேட்டுக்கு கொண்டு வருவது வழக்கம்.

    அதுபோல சம்பவத்தன்று காலை சகுந்தலா பெரிய மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி தள்ளுவண்டியில் கொண்டு வந்தார். வழியில் தட்டு வண்டியை ஓட்டி வந்த தொழிலாளி தட்டுவண்டியை நிறுத்தி குளிர்பானம் கொடுத்தார். அதனை வாங்கி குடித்த சகுந்தலா சிறிது நேரத்தில் தட்டுவண்டியிலேயே மயங்கி போனார்.

    பின்னர் மயக்கம் தெளிந்து நினைவு திரும்பிய போது முருங்கப்பாக்கம் அருகே ஓட்டன்பாளையத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கிடப்பதை கண்டு சகுந்தலா திடுக்கிட்டார். அருகில் காய்கறி மூட்டைகள் கிடந்தன. கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை. தட்டு வண்டி தொழிலாளி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஓட்டன்பாளையத்துக்கு கடத்தி வந்து நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சகுந்தலா இதுபற்றி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சகுந்தலாவிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகையை பறித்து சென்றது வாழைக்குளத்தை சேர்ந்த தட்டுவண்டி தொழிலாளி ராஜா (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 4 பவுன் செயினையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×