search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    சென்னை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை எழும்பூர்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில்(வண்டிஎண்:06085). ஆகஸ்டு 30 மற்றும் செப்டம்பர் மாதம் 4, 6 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

    * வேளாங்கண்ணி-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு கட்டண ரெயில்(06086) ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 5, 7 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

    * சென்னை சென்டிரல்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில்(06087) ஆகஸ்டு 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

    * வேளாங்கண்ணி- சென்னை சென்டிரல் இடையே சிறப்பு கட்டண ரெயில்(06088) ஆகஸ்டு 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

    * சென்னை சென்டிரல்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில்(06091) ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

    * வேளாங்கண்ணி-சென்னை சென்டிரல் இடையே சிறப்பு கட்டண ரெயில்(06092) செப்டம்பர் 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

    * எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில்(06016) ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

    * வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரெயில்(06015) செப்டம்பர் மாதம் 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

    * நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில்(06090) ஆகஸ்டு 27 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

    * வேளாங்கண்ணி-நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரெயில்(06089) ஆகஸ்டு 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

    * சென்னை எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு கட்டண ரெயில்(06093) செப்டம்பர் மாதம் 7-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகப்பட்டினத்தை சென்றடையும்.

    * வேளாங்கண்ணி-பாந்த்ரா இடையே சிறப்பு கட்டண ரெயில்(09028) ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, 31-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு பாந்த்ராவை சென்றடையும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×