search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
    X

    மத்திய அரசை கண்டித்து இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

    திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி:

    இன்றைய சூழலில் விவசாயிகள் முதல் பெரிய பணக்காரர்கள் வரை அனைவருமே கியாஸ் சிலிண்டரையே பயன்படுத்துகிறார்கள். இதனால் ஒருசில நேரங்களில் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிலிண்டருக்கு மானியம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறி சிலிண்டர் விலையை ஏற்றியது.

    கடந்த ஒருசில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு திடீரென ஒரு அறிப்பை அறிவித்துள்ளது. இதில் சிலிண்டருக்கான மானியம் முழுமையாக ரத்தாகிறது. மாதம் ரூ.8500-க்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை. ஊனமுற்றோர்க்கு அறிவித்திருந்த ரேஷன் பொருட்கள் இல்லை என தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்ளை நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் இந்திய தேசிய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்விராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமயந்தி, ஒன்றிய செயலாளர் குருமணி, ஒன்றிய துணைச்செயலாளர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது கியாஸ் சிலிண்டரை வைத்தும், அருகில் விறகு அடுப்பை வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலிண்டருக்கான மானியத்தை கொடுக்க வேண்டும். சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×