search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியது சரியே: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
    X

    டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியது சரியே: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

    டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியது சரியே என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

    மதுரை:

    மதுரை மாவட்ட ஏ.ஐ.டி. யூ.சி. செயலாளர் கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்றவற்றை சட்ட விரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் வாங்கியதாக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் அவருக்கு டி.ஜி.பி. பணியை 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவது சட்டவிரோதம். எனவே டி.கே. ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர் மீதான லஞ்சப்புகாரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை பல்வேறு கட்டங்களாக விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் டி.ஜி.பி. ராஜேந்திரன் பணி நீட்டிப்பு சரியே என்று தீர்ப்பு கூறினர். மேலும் டி.ஜி.பி. மீதான புகாரை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணையர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

    2 வாரங்களில் இந்த ஆணையத்தை தமிழக அரசு அமைக்கவேண்டும். ஆணையத்தின் விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. புகார் குறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆணையத்திடம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    Next Story
    ×