search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் 2 நாட்களாக சதத்தை தாண்டிய வெயில் - பொதுமக்கள் கடும் அவதி
    X

    மதுரையில் 2 நாட்களாக சதத்தை தாண்டிய வெயில் - பொதுமக்கள் கடும் அவதி

    கடந்த 2 நாட்களாக மதுரையில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    மதுரை:

    ஏப்ரல், மே மாதங்களில் வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர வெயிலால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    பின்னர் பருவ மழை பெய்யும் என நம்பி இருந்த மக்களுக்கு அதுவும் பொய்த்து போனதால் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் பொது மக்களும், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளும் தவியாய் தவித்து வருகின்றனர்.

    ஆனால் தற்போதும் மதுரையில் அக்னி நட்சத்திரம்போல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் 106 டிகிரியை தாண்டியது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது.

    இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இரவில் வீடுகளில் வெப்பம் அதிக அளவில் இருப்பதாலும், கொசு தொல்லைகளாலும் குழந்தைகள், வயதானவர்கள் விடிய, விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×