search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அரசு கல்லூரியில் 1 வாரத்துக்குள் மாணவர் சேர்க்கை தொடங்கும்: பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தகவல்
    X

    பொள்ளாச்சி அரசு கல்லூரியில் 1 வாரத்துக்குள் மாணவர் சேர்க்கை தொடங்கும்: பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தகவல்

    பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் 1 வாரத்திற்குள் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்தார்.
    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி தொடங்குவதற்கான இடத்தை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கணபதி, பதிவாளர் (பொறுப்பு) வனிதா, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது துணை வேந்தர் கணபதி கூறியதாவது:-

    பொள்ளாச்சி சுற்றுப்பகுதி மக்களின் நலனுக்காக பாரதியார் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரி பொள்ளாச்சியில் தொடங்க முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக சமத்தூர் ராம ஐயங்கார் பள்ளியில் 5 வகுப்புகளுடன் கல்லூரி தொடங்கும். அதற்கு பிறகு நிரந்தரமான இடம் கிடைத்த பிறகு கல்லூரி விரிவு படுத்தப்படும்.

    பி.பி.ஏ., பி.ஏ., ஆங்கிலம், பி.ஏ., எக்னாமிக்ஸ், பி.காம்.சி.ஏ., பி.காம். புரபசனல் அக்கவுண்ட், பி.எஸ்.சி. கணிதம் ஆகிய வகுப்புகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதில் மாற்றங்கள் வரவும் வாய்ப்புள்ளது. வரும் ஒரு வாரத்திற்குள் இந்த ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தாசில்தார் செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகருப்பண்ணசாமி, முன்னாள் நகர் மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், தம்பு, வீராசாமி, ஜேம்ஸ், தனசேகர், நீலகண்டன் உட்பட பலர் இருந்தனர்.
    Next Story
    ×