search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு மறியல்: 1,000 பேர் கைது
    X

    திருச்சியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு மறியல்: 1,000 பேர் கைது

    திருச்சி மாவட்டம் முழுவதும் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியலில் ஈடுபட்ட சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று தமிழ் நாடு முழுவதும் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி-சாலை மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தமிழக கிராமபுற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும், தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை கட்டணம் இல்லாத கல்வி முறையை கொண்ட வர வேண்டும்,

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே இன்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மாவதி தலைமையில் கோட்டை தெப்ப குளத்தில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.

    பேரணியில் மாவட்ட தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் அண்ணாத்துரை, புஷ்பம் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியாக சென்றபோது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து கொண்டு கோ‌ஷம் எழுப்பியவாறு சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டை போலீசார் விரைந்து சென்று பேரணியாக சென்ற 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க கோட்டை உதவி போலீஸ் கமி‌ஷனர் சீனிவாசபெருமாள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதே போல் மணப்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்ட 102 பேரையும் துவரங்குறிச்சியில் மறியல் செய்த 11 பேரையும் வையம்பட்டியில் மறியலில் ஈடுபட முயன்ற 67 பேரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்பத்தில் தங்க வைத்தனர்.

    திருச்சி-வயலூர் ரோட்டில் சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக் கோரியும், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், மணிகண்டம் ஒன்றியத்தில் காவேரி கூட்டு குடிநீர் தட்டுபாடுயின்றி தொடர்ந்து கிடைக்க கோரியும் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்துக்கு இந்திய கம்யூ. கட்சி மாநகர் மாவட்ட குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மணி கண்டம் ஒன்றிய செயலாளர் சண்முகம், சிவா, சுகுணா ராஜகோபால், பாஸ்கரன் மற்றும் பெண்கள் 55 பேர் உள்பட மொத்தம் 70 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சாலை மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் திருச்சி மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்டு சுமார் ஆயிரம் பேர் கைதானார்கள்.

    Next Story
    ×