search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணாரப்பேட்டை டாஸ்மாக் கடையில் ரூ.33 லட்சம் கையாடல்
    X

    வண்ணாரப்பேட்டை டாஸ்மாக் கடையில் ரூ.33 லட்சம் கையாடல்

    வண்ணாரப்பேட்டை டாஸ்மாக் கடையில் ரூ.33 லட்சம் கையாடல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் விற்பனையாகும் மது பானங்களின் பணம் கடையில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

    மறுநாள் வசூலிப்பாளர்கள் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று பணத்தை வசூலிப்பார்கள்.

    சனி, ஞாயிறு வங்கி விடுமுறையாக இருந்தால் திங்கட்கிழமைதான் கடை மேற்பார்வையாளரிடம் இருந்து கணக்கு பெறப்படும்.

    இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை பணம் முழுமையாக செலுத்தப்படவில்லை என கணக்குகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. விற்பனை பணத்தை முழுமையாக செலுத்தாமல் மோசடி செய்திருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    33 லட்சத்து 60 ஆயிரத்து 116 ரூபாய் கடை ஊழியர்கள் கையாடல் செய்திருப்பது தெரிய வந்ததையடுத்து சென்னை வடக்கு மண்டல மேலாளர் பியோதங்கதுரை வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதில் டாஸ்மாக் விற்பனை பணத்தை மேற் பார்வையாளர் உள்பட ஊழியர்கள் 4 பேர் ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் கையாடல் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து அந்த கடையின் மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணி (46), விற்பனையாளர்கள் நாகராஜ், சுந்தரம், உதவியாளர் ராமு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×