search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வினாடிக்கு 1279 கனஅடி தண்ணீர் வருகை: பவானிசாகர் அணை நீர்மட்டம் 50.52 அடி
    X

    வினாடிக்கு 1279 கனஅடி தண்ணீர் வருகை: பவானிசாகர் அணை நீர்மட்டம் 50.52 அடி

    ஊட்டி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1279 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் 50.52 அடியாக உள்ளது.
    ஈரோடு:

    ஊட்டிமலை பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததையொட்டி பவானிசாகர் அணைக்கு கடந்த வாரம் 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதையொட்டி அணையின் நீர் மட்டம் 50 அடியை தாண்டியது. அணைக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் ஊட்டி மலையில் தற்போது மழை பெய்வது நின்றுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் படிப்படியாக குறைந்து இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1279 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 50.55அடியாக இருந்தது.

    இதில் பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 200 கனஅடி வீதமும், வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் இன்னும் இரண்டொரு நாளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×