search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை விளையாட்டரங்கில் கிணறு அமைக்கும் பணி: கலெக்டர் ஆய்வு
    X

    புதுக்கோட்டை விளையாட்டரங்கில் கிணறு அமைக்கும் பணி: கலெக்டர் ஆய்வு

    புதுக்கோட்டை விளையாட்டரங்கில் கிணறு அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான விடுதி, கூடைப்பந்து, கால்பந்து, கையுந்து பந்து, ஹாக்கி பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான தனித்தனி மைதானங்களும், தடகளப்போட்டிகளை விரிவாக மேற்கொள்ள தேவையான வசதிகளும் உள்ளன.

    எனவே நாள்தோறும் ஆயிரக் கணக்கான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் பல்வேறு தேவைகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தன்னிறைவு திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதான கட்டுமான நிதி அமைப்பின் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கான ரூ.3.16 லட்சம் பங்களிப்புடன், மொத்தம் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் கிணறு அமைக்கப்பட்டு வருகின்றது.

    இந்த கிணறு 20 அடி அகலமும், 10 மீட்டர் ஆழமும் கொண்டதாகவும், சுற்றுச்சுவர் பாதுகாப்புடன், கிணற்றின் மேல்பகுதியில் பாதுகாப்பு கம்பிவலை மூடி அமைப்புடன் கட்டப்பட உள்ளது. இந்த கிணறு அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கிணறு அமைக்கும் பணியினை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×