search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் கூடுதல் வாக்கு: எதிர்கட்சிகளுக்கு ஒரு பாடம் -  நாராயணசாமி பேட்டி
    X

    ஜனாதிபதி தேர்தலில் கூடுதல் வாக்கு: எதிர்கட்சிகளுக்கு ஒரு பாடம் - நாராயணசாமி பேட்டி

    ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு ஓட்டு கிடைத்திருப்பது, எதிர்கட்சிகளுக்கு இது ஒரு பாடம் என்று முதல் - அமைச்சர் நாராயணசாமி பேட்டியில் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில் புதுவையில் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர்.

    இதில் ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக விழுந்துள்ளது. காங்கிரசுக்கு 19 ஓட்டுக்களும் பா.ஜ.க.விற்கு 10 ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.

    புதுவையில் காங்கிரஸ் 15, தி.மு.க. 2, சுயேட்சை 1 என ஆளும் தரப்பில் 18 பேர் இருந்தும் காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு 19 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.

    எதிர்கட்சி வரிசையில் என்.ஆர். காங்கிரஸ்-8, அ.தி.மு.க.-4 என இருந்த போதும் ராம்நாத் கோவிந்திற்கு 10 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஏனெனில் ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக விழுந்து விட்டது.

    புதுவையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு ஓட்டு கிடைத்திருப்பதற்கு முதல் - அமைச்சர் நாராயணசாமி நன்றி தெரிவித்தார்.

    புதுவையில் ஆட்சி கலைந்து விடும் என கூறி வரும் எதிர்கட்சிக்கு இது ஒரு பாடம்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தின் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான். ராம்நாத் கோவிந்த் பாரபட்சமின்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்படுவார் என நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    Next Story
    ×