search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் ஐ.ஜி. அருளின் மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
    X

    முன்னாள் ஐ.ஜி. அருளின் மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

    முன்னாள் ஐ.ஜி. அருளின் மகன் மைக்கேல் வீட்டில் ரூ. 60 கோடி சொத்து தொடர்பாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    மறைந்த தமிழக போலீஸ் ஐ.ஜி. அருள். இவர் இன்டர் போல் அமைப்பின் ஆசிய துணை தலைவராக பணியாற்றிய முதல் ஐ.ஜி. ஆவார். தொடர்ந்து 1968 முதல் 1971 வரை சி.பி.ஐ. இயக்குனராகவும், 1973 முதல் 1976-ம் ஆண்டு வரை தமிழக போலீஸ் ஐ.ஜி.யாகவும் பணியாற்றினார்.

    அவர் ஓய்வு பெற்ற பின் 1976-ம் ஆண்டு முதல் தமிழக தலைமை போலீஸ் அதிகாரி பதவி ஐ.ஜி. என்று இருப்பது டி.ஜி.பியாக மாற்றப்பட்டது. எனவே கடைசி ஐ.ஜி.யாக அருள் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள வாழயாடி ஆகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1942-ல் ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றார்.

    ஐ.ஜி. அருள் மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தில் சொத்துப்பிரச்சனை ஏற்பட்டது. அருள் குடும்பத்துக்கு சொந்தமான எழும்பூர் பாந்தியன் ரோட்டில் உள்ள 2177 சதுர அடியில் 8 கிரவுண்ட் நிலம் விற்பனை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது.

    மேலும் ரூ. 60 கோடி சொத்து தொடர்பாக வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ரூ. 60 கோடி சொத்து தொடர்பாக வருமான வரித்துறையினர் இன்று சென்னை அடையாறு போட்கிளப்பில் உள்ள அருளின் மகன் மைக்கேல் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×