search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த 12 எம்.பி.க்களை இழுக்க எடப்பாடி அணி முயற்சி
    X

    ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த 12 எம்.பி.க்களை இழுக்க எடப்பாடி அணி முயற்சி

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். அணி தரப்பு எம்.பி.க்களை இழுக்க முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பல்வேறு வழக்குகளில் சிக்கி இருப்பதால் அவர் கட்சிப்பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி.தினகரன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) மீண்டும் கட்சிப்பணியில் தீவிரமாக ஈடுபட போவதாக அறிவித்தார். இந்த நிலையில் அதிகார போட்டியில் தன் பலத்தை நிரூபிப்பதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

    ஜனாதிபதி தேர்தலில் தங்கள் தரப்பு பா.ஜனதாவை ஆதரிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவித்தார். அதன் பிறகு தான் டி.டி.வி.தினகரனும் ஆதரவை தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு 37 எம்.பி.க் களும் டெல்லி மேல் சபையில் 13 எம்.பி.க்களும் உள்ளனர்.

    இதில் 32 பேர் எடப் பாடி அணியில் இருக்கிறார்கள்.டி.டி.வி. தினகரன் அணியில் 5 பேர் உள்ளனர். 12 பேர் ஓ.பி.எஸ். அணியில் இருக்கிறார்கள்.

    சசிகலா புஷ்பா எந்த அணியிலும் சேராதவராக இருக்கிறார்.

    பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எம்.பி.க்கள் கூட்டம் நடத்தி ஜெயலலிதா ஆலோசனை வழங்குவார். அதே பாணியில் இப்போது எடப்பாடி பழனிசாமியும் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டினார்.

    இந்த கூட்டத்தில் 33 எம்.பி.க்கள் பங்கேற்றனர். தம்பித்துரை,வசந்தி முருகேசன், கோபால், பரசுராமன் ஆகிய 4 எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கடிதம் கொடுத்துள்ளனர்.

    இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்களை போல் எம்.பி.க்களிடமும் தனது நெருக்கத்தை அதிகமாக்கி கொண்டார். எந்த நேரமும் நீங்கள் நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று எம்.பி.க்களுக்கு ஊக்கம் கொடுத்தார்.

    தினகரனுக்கு ஆதரவாக இருப்பவர்களையும், ஓ.பி.எஸ். முகாமில் இருக்கும் எம்.பி.க்களையும் இழுக்கவே எடப்பாடி எம்.பி.க்களுடனான தொடர்பை நெருக்கமாக்கி கொள்வதாக கூறப்படுகிறது.

    ஓ.பி.எஸ். அணியில் மைத்ரேயன், லட்சுமணன், பி.ஆர். சுந்தரம், அசோக்குமார், வனரோஜா,செங்குட்டுவன், ராஜேந்திரன், பார்த்திபன், கோபாலகிருஷ்ணன், சத்யபாமா, ஜெய்சிங் நட்டர்ஜி, மருதராஜா ஆகிய 12 பேர் இருக்கிறார்கள்.

    எடப்பாடி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஓ.பி. எஸ். அணி தரப்பு எம்.பி.க்கள் சிலரும் வர தயாராக இருப்பதாக பேசப்பட்டது. அவர்களையும் இழுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள விருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×