search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் தக்காளி, சின்ன வெங்காயம் கிலோ ரூ. 100-க்கு விற்பனை
    X

    சென்னையில் தக்காளி, சின்ன வெங்காயம் கிலோ ரூ. 100-க்கு விற்பனை

    தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் இல்லாததால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    தக்காளி விலை கடந்த மாதம் 1 கிலோ ரூ. 20 வரை விற்கப்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் தக்காளி விலை உயரத் தொடங்கியது.

    முதல் வாரத்தில் 1 கிலோ தக்காளி ரூ. 40 மற்றும் ரூ. 50க்கு விற்றது. இந்த வாரம் தொடங்கியவுடன் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    2 தினங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ. 80-க்கு விற்கப்பட்டது. சென்னையில் இன்று 1 கிலோ தக்காளி ரூ. 100 ஆக உயர்ந்தது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ரூ. 90 ஆகும். சில்லரை கடைகளில் தக்காளி கிலோ ரூ. 100 க்கு விற்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் இல்லாததால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ. 120-க்கு விற்கப்பட்டது. அதே நேரம் சில்லரை கடைகளில் ரூ. 140 வரை விற்கப்பட்டது.


    இன்று சின்ன வெங்காயம் விலை சற்று குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று சின்னவெங்காயம் கிலோ ரூ. 90-க்கு விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் மற்ற காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் கிலோ ரூ. 35-ல் இருந்து ரூ. 40 ஆகவும், பீன்ஸ், ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆகவும், முருங்கைக்காய் ரூ. 40-ல் இருந்து ரூ. 60 ஆகவும், பீட்ரூட் ரூ. 25-ல் இருந்து ரூ. 30 ஆகவும் உயர்ந்துள்ளது. கத்திரிக்காய் ரூ. 50-ல் இருந்து ரூ. 40 ஆக குறைந்துள்ளது. கேரட் ரூ. 70-க்கு விற்கப்படுகிறது.
    Next Story
    ×