search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் பெண்கள், பழங்குடியினருக்கு தனிவார்டுகள்: சட்டசபையில் மசோதா தாக்கல்
    X

    உள்ளாட்சி தேர்தலில் பெண்கள், பழங்குடியினருக்கு தனிவார்டுகள்: சட்டசபையில் மசோதா தாக்கல்

    உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு உரிய இட ஒதுக்கீடு செய்வதற்கான சட்ட மசோதா ஒன்றை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு உரிய இட ஒதுக்கீடு செய்வதற்கான சட்ட மசோதா ஒன்றை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ள வார்டுகளை தொகுதி வரையறை செய்வது, பழங்குடியினர் பட்டியல் ஜாதியினர், பெண்கள் ஆகியோரின் இட ஒதுக்கீடு பற்றிய பிரச்சினைகள் கடுமையானது. சீர்தூக்கி பார்க்கக்கூடியது.

    எனவே ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டுகளில் தொகுதி வரையறைகளை உருவாக்குவதற்காகவும், அது பற்றி பரிந்துரை செய்வதற்காகவும் ஆணையம் ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×