search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
    X

    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வரும் 11-ம் தேதி அறிவித்திருந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

    சென்னை: 

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் சமிபத்தில் மூடப்பட்டன. இதனால் அந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை இழந்தனர். வேறு வேலை கிடைக்காததால் தங்களின் படிப்பு தகுதிக்கும், பணி மூப்புக்கும் ஏற்ப அரசு துறைகளில் வேலையில் அமர்த்த வேண்டும் என தமிழக அரசிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

    இதுகுறித்து அரசு எந்த முடிவும் எடுக்காததால், தமிழகத்திலுள்ள ஐந்து டாஸ்மாக் மண்டல அலுவலகலின் முன் வரும் 11-ம் தேதி (செவ்வாய்கிழமை) காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக டாஸ்மாக் பணியாளர்கள் சார்ந்திருக்கும் மூன்று தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்திருந்தன. 

    இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம், தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகளை குறித்து விளக்கிய தொழிற்சங்க பிரதிநிதிகள், கோரிக்கைகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்காக தமிழக அரசுக்கு போதிய அவகாசம் அளிக்கும் வகையில் வரும் 11-ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், அரசின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் தொழில்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

    Next Story
    ×