search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் விபத்து ரெயில்வே போலீஸ்காரர் பலி
    X

    சேலத்தில் விபத்து ரெயில்வே போலீஸ்காரர் பலி

    சேலத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ரெயில்வே போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்ட கவுண்டம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சதீஷ்குமார் (வயது 37).

    இவர் ஈரோடு ரெயில்வே போலீஸ்காரராக பணியாற்றினார். இவருக்கு திருமணம் ஆகி இளவரசி என்ற மனைவியும், சுபாஷ் கிருஷ்ணா (3) என்ற மகனும் உள்ளனர்.

    இவரது மனைவி இளவரசி கடந்த 3 மாதமாக சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த 1-ந் தேதி மதியம் அவரை பார்த்து விட்டு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் உத்தமசோழபுரம் பாலம் அருகே சேலம்-கோவை தேசியநெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பவானியில் இருந்து சேலம் நோக்கி வந்த ஆம்னி வேன் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் காயம் அடைந்த அவர் சேலம் அரியானூர் மற்றும் 3 ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். என்றாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் இறந்துபோனார்.

    இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    இந்த விபத்தில் ஆம்னி வேன் டிரைவர் பிரபுவும் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரியானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    Next Story
    ×