search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதத் தொகையாக ரூ. 15,150 வசூல் செய்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்டுத்துவதை தவிர்க்கும் பொருட்டு நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பர்லியார், குஞ்சப்பனை, கக்கநள்ளா, பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளுர், சோலாடி, கெத்தை மற்றும் நாடுகாணி ஆகிய சோதனைச் சாவடிகளில் வெளி மாநிலத்தினர் அறியும் பொருட்டு தமிழ், ஆங்கிலம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

    தற்போது மேற்கண்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் பொருட்டு ஒருநாள் ஒட்டு மொத்த வாகன சோதனை நடைபெற்றது.

    இதற்காக ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரியில் தலா 1 குழுவும், கூடலூரில் 6 குழுக்களும் நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் சுற்றுலா மற்றும் வெளியூர் வாகனங்களை ஆய்வு செய்து 10.500 கி.கி. எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதத் தொகையாக ரூ. 15,150 வசூல் செய்தனர். இனிவரும் காலங்களில் பொதுமக்களும், சுற்றுலா மற்றும் வெளியூர் பயணிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட ஒத்துழைப்பு நல்குமாறு கலெக்டர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×