search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம்: முதல்வருக்கு எதிராக கோர்ட்டில் ஸ்டாலின் விளக்க மனு
    X

    எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம்: முதல்வருக்கு எதிராக கோர்ட்டில் ஸ்டாலின் விளக்க மனு

    எம்.எல்.ஏ. வீடியோ விவகாரத்தில் சிபிஐ தலையிட முடியாது என்ற முதல்வர் பழனிச்சாமியின் கோரிக்கையை நிராகரிக்க கோரி, ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் விளக்க மனு தாக்கல் செய்தார்.
    சென்னை:

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி வீடியோ ஆதாரம் ஒன்றினை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    திமுக தொடர்ந்த இந்த வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐகோர்ட்டில் கடந்த ஜூன் 22-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவகாரத்தினை சிபிஐ விசாரிக்க முடியாது என்று கூறியிருந்தார். அதேபோல், சட்டபை செயலாளர் தரப்பிலும் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இதனையடுத்து, முதலமைச்சர் அளித்த பதிலுக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என்று திமுக சார்பில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுந்தர் கொண்ட அமர்வு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

    இந்நிலையில், சிபிஐ விசாரணை வேண்டாம் என்ற முதல்வரின் கோரிக்கையை நிராகரிக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் மனு தாக்கல் செய்தார். 

    அந்த மனுவில், பணம், நகைகள் பறிமாற்றம் நடந்துள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உகந்தது ஆகும். வருவாய் புலனாய்வுக்கும் இந்த விவகாரம் உகந்ததாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×