search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் உள்நாட்டு உற்பத்தி - சுய தொழில்கள் அழியும்: த.வெள்ளையன் எச்சரிக்கை
    X

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் உள்நாட்டு உற்பத்தி - சுய தொழில்கள் அழியும்: த.வெள்ளையன் எச்சரிக்கை

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நமது நாட்டின் சுய தொழில்கள், உள்நாட்டு உற்பத்தி, சிறு தொழில்கள் நசுக்கப்படும். வெளிநாட்டு கம்பெனிகளின் உற்பத்திகள் அதிகரிக்கும் என்று த.வெள்ளையன் கூறினார்.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பொருட்கள் விலை கூடுமே தவிர விலை குறையாது.



    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மத்திய அரசின் ‘கஜானா’ நிரம்பும். பெட்ரோல், டீசல் மூலம்தான் நமது அரசுக்கு 60 சதவீத வருமானம் வருகிறது. தற்போது இந்த வருமானம் அரசுக்கு 25 சதவீதமாக குறையும். அதை ஈடுகட்ட மற்ற பொருட்கள் அனைத்தும் மீது வரி திணிக்கப்படும்.

    வெளிநாட்டு கம்பெனிகளின் உற்பத்திகள் அதிகரிக்கும். சுய தொழில்கள், உள்நாட்டு உற்பத்தி, சிறு தொழில்கள் நசுக்கப்படும். சிறு வணிகர்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு கணக்கு காட்ட வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு என்பதால் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

    பொருட்கள் விற்பனையை எங்கும் இருந்தும் இயக்க முடியும். நமது நாட்டின் உற்பத்தி, விற்பனையை வெளிநாடுகளில் இருந்து உதாரணத்துக்கு அமெரிக்காவில் இருந்து கூட இயக்க முடியும். நமது நாட்டின் சுய தொழில்கள் அழியும். நமது நாட்டின் சுதந்திரத்தை நாம் இழந்து விடுவோம்.

    வெளிநாடுகளில் இருந்து உணவு பொருட்கள் வரும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள் கூட விற்பனைக்கு வரும். இதனால் உடல் நலக்கேடு ஏற்படும்.

    ஆன்லைன் வணிகத்தில் வளர்ச்சி ஏற்படும். சில்லரை வணிகம் அடியோடு அழியும் சூழ்நிலை உருவாகும். முதலில் குறைந்த விலையில் பொருட்களை விற்பார்கள். அதன்பின் விலை ஏற்றப்படும். இதன் பாதிப்புகளை உணர சில ஆண்டுகள் பிடிக்கும்.

    இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.

    Next Story
    ×