search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதை பொருட்களை விற்றால் குண்டர் சட்டம் பாயும் - கமி‌ஷனர் எச்சரிக்கை
    X

    போதை பொருட்களை விற்றால் குண்டர் சட்டம் பாயும் - கமி‌ஷனர் எச்சரிக்கை

    பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் கமி‌ஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலைய பகுதியில் இதுதொடர்பாக இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் இந்த பேரணியை தொடங்கிவைத்தார். வட சென்னை கூடுதல் ஆணையர் ஜெயராம், மேற்கு மண்டல இணை ஆணையர்கள் சந்தோஷ்குமார், பிரேம் ஆனந்த் சின்கா, துணை ஆணையர்கள் திருநாவுக்கரசு, சுதாகர், ரூபேஷ்குமார் மீனா மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    போலீஸ் சிறார் மன்றத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    நிகழ்ச்சியில் கமி‌ஷனர் ஏ.கே. விசுவநாதன் பேசியதாவது:-

    போதை பழக்கத்திற்கு மாணவ - மாணவிகள் அடிமையாகி விடக்கூடாது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    பள்ளி, கல்லூரி ஆகியவற்றின் அருகில் போதை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்பது பற்றி எப்போதுமே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போதை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.

    இவ்வாறு கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் கூறினார்.
    Next Story
    ×