search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா புதுவை வந்தார்
    X

    பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா புதுவை வந்தார்

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் அமித்ஷா இன்று காலை புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தார். அவரை அங்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
    புதுச்சேரி:

    2019 பாராளுமன்ற தேர்தலுக்கு தொண்டர்களை தயார் படுத்துவதற்காக பாரதிய ஜனதா அகில இந்திய தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    இதுவரை 90 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ள அவர் 91வது நாள் பயணமாக இன்று புதுவை வந்தார்.

    புதுவையில் அவர் இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் அமித்ஷா இன்று (திங்கட்கிழமை) காலை 10.15 மணியளவில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தார். அவரை அங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர்கள் எச.ராஜா, அனில்ஜெயன், புதுவை மாநில பொறுப்பாளர் மகேஸ்வரி எம்.பி., அமைப்பு இணை செயலாளர் சந்தோஷ், புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சவாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து புதுவை மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகளை மாநில தலைவர் சாமிநாதன் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் அமித்ஷாவுக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சட்டமன்றம் அருகே உள்ள பாரதி பூங்காவுக்கு அமித்ஷா வந்தார். அவரை புதுவை மாநில பா.ஜனதா கட்சியினர் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    ஊர்வலம் கிழக்கு கடற்கரை சாலை, அஜந்தா சந்திப்பு, படேல் சாலை, கடற்கரை சாலை வழியாக பாரதி பூங்காவை அடைந்தது. அங்குள்ள பாரதியார் சிலைக்கு அமித்ஷா மாலை அணிவித்தார்.


    தொடர்ந்து ஜிப்மர் வளாகத்தில் உள்ள விருந்தினர் விடுதிக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளையும், முக்கிய பிரமுகர்களையும் அணி, அணியாக சந்தித்தார்.

    மதியம் 12 மணியளவில் ராயல்டி பார்க் ஓட்டலுக்கு அமித்ஷா செல்கிறார். அங்கு புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் அமித்ஷா சிறப்புரையாற்றுகிறார்.

    இன்று மாலை 5 மணியளவில் ஆனந்தா இன் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், சமூகநல அமைப்பினர், மாணவர் பேரவையினர் பங்கேற்கிறார்கள்.

    அவர்களுடன் அமித்ஷா கலந்துரையாடுகிறார். தொடர்ந்து அண்ணாமலை, செண்பகா ஓட்டல்களிலும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தொடர்ந்து இரவு 10.30 மணி வரை அவர் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.

    இன்று இரவு ஜிப்மர் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையிலேயே தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் ஆரோவில் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர், காலை 9.15 மணியளவில் புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்கிறார்.

    அமித்ஷாவின் வருகையையொட்டி பாரதிய ஜனதா கட்சியினர் நகர் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×