search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது: டைரக்டர் கவுதமன் அறிக்கை
    X

    அ.தி.மு.க.வின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது: டைரக்டர் கவுதமன் அறிக்கை

    ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க.வின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது என டைரக்டர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    டைரக்டர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கு மேல் போராடிய போது நிர்வாணமாக ஓட விட்டதை தவிர மத்திய அரசு வேறெந்த சலுகையையும் தரவில்லை.

    உச்சநீதிமன்றம் ‘‘உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம்’’ அமையுங்கள் என மத்திய அரசிற்கு உத்தரவிட்டபோது பிரமாண பத்திரம் தாக்கல் செய்து அதனை தடுத்து நிறுத்தி இன்று முப்போகமும் விளைந்த எங்கள் தஞ்சை நிலங்கள் தரிசாக போனதோடு மட்டுமல்லாமல் அங்கு நிற்கும் பனை கூட கருகி பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது.

    மாணவர்கள் மட்டுமல்ல நீங்களும் ‘நீட்’ தேர்வு வேண்டாமென்றீர்கள். மாறாக நம் மீது திணித்துவிட்டது மத்திய அரசு மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்று இன்றும் இரவு பகலாக எம்மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பிடிவாதமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

    தமிழக மீனவர்களின் வலைகள் சிங்களர்களால் அறுக்கப்படுகிறது. படகுகள் அபகரிக்கப்படுகின்றன. பல நேரங்களில் சிறை பிடிக்கப்படுகிறார்கள் சில நேரங்களில் பிணங்களாகி கரைக்கு ஒதுங்குகிறார்கள். இது அத்தனையையும் கண்டு கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

    இப்படி தமிழ்நாட்டின் நலனில் புல்லின் நுனி அளவு கூட அக்கரை இல்லாத பாரதிய ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தங்கள் அரசின் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தரும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பது தங்களுக்கு வாக்களித்து கோட்டைக்கு அனுப்பிய மக்களுக்கு பேரதிர்ச்சியை யும், பெரும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த தருணத்திலேயாவது நம் உரிமைகளை மீட்டெடுக்க, நம் மண்ணும் மக்களும் மகிழ்ச்சியோடு வாழ திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்துங்கள். அதுவே தங்களுக்கும் தங்கள் ஆட்சிக்கும் நன்மை பயக்கும். 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினம் ஒரு போதும் மண்டியிடாது என்பதனை நிரூபித்து நமக்கான உரிமைகளை வென்றெடுப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×