search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பிளஸ்-2’ தேர்வில் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த 40 சதவீதம் பேருக்கு மார்க் குறைந்தது
    X

    ‘பிளஸ்-2’ தேர்வில் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த 40 சதவீதம் பேருக்கு மார்க் குறைந்தது

    ‘பிளஸ்-2’ பொதுத் தேர்வில் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீதம் மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது.
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த மாதம் 12-ந்தேதி வெளியானது. இந்த தேர்வில் மறு கூட்டலுக்கும், மறு மதிப்பீடு செய்யக் கோரியும் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். கணிதம், உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் பலர் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். மொத்தம் 4 ஆயிரம் விடைத்தாள் பேப்பர்கள் மறு மதிப்பீடுக்கு வந்தன. இதன் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இதன் முடிவு மாணவ- மாணவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீதத்துக்கு மேலானவர்களின் மதிப்பெண்கள் குறைந்து உள்ளது. அதாவது 1,500 விடைத்தாள் பேப்பரின் மார்க் குறைந்து உள்ளது. 8 மதிப்பெண்வரை குறைந்துள்ளதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

    500 விடைத்தாள் பேப்பரில் மட்டுமே மதிப்பெண் உயர்ந்துள்ளது. 13 மார்க்வரை அதிகரித்து உள்ளது. எஞ்சிய விடைத்தாள் பேப்பர்களில் மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் இல்லை.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மறு மதிப்பீடு மார்க் கனிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் 2 ஆயிரம் மாணவர்களுக்கு மறுமதிப்பீடு மூலம் மதிப்பெண் உயர்ந்து இருந்தது.

    இந்த மறு மதிப்பீடு முடிவு மூலம் பி.இ மற்றும் பி.டெக் படிப்புக்கான என்ஜினீயரிங் ரேங்க் பட்டியலில் மாற்றம் ஏற்படும். இதேபோல வேளாண் படிப்புக்கான கவுன்சிலிங் தரவரிசையிலும் மாற்றம் ஏற்படும்.
    Next Story
    ×