search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வில் அணிகள் என்பதே கிடையாது: செங்கோட்டையன்
    X

    அ.தி.மு.க.வில் அணிகள் என்பதே கிடையாது: செங்கோட்டையன்

    அ.தி.மு.க ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாகவே உள்ளது, அணிகள் என்பதே கிடையாது. ஊடகங்கள் தான் அ.தி.மு.க.வில் பல்வேறு அணிகள் இருப்பதாக கூறுகின்றன என செங்கோட்டையன் கூறினார்.
    திருச்சி:

    மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

    அ.தி.மு.க ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாகவே உள்ளது, அணிகள் என்பதே கிடையாது. ஊடகங்கள் தான் அ.தி.மு.க.வில் பல்வேறு அணிகள் இருப்பதாக கூறுகின்றன. கல்வித்துறையில் ஒர் ஆண்டிற்கு பிறகு தனியார் பள்ளியில் சேரக்கூடிய மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் சேரக்கூடிய நிலை தமிழகத்தில் உருவாகும்.

    தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீர்ப்புக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டபேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில திட்டங்களை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் காரணமாக சில கோளாறு உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் சமுதாயக்கூடத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி மையத்திற்கு (ஐ.டி.ஐ.) புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து குழு அமைக்கப்பட்டு முடிவு செய்யப்படும். மத்திய அரசு தமிழக அரசுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலை யாரும் தடுத்து நிறுத்த வில்லை. நீதிமன்றம் தீர்ப்பு வந்தால் நாங்கள் நடத்த தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
    Next Story
    ×