search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச யோகா தினம்: தீபா வாழ்த்து
    X

    சர்வதேச யோகா தினம்: தீபா வாழ்த்து

    உலக மக்கள் அனைவரும் உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்திட வேண்டும் என யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அ.தி.மு.க ஜெ.தீபா அணியின் பொதுச்செயலாளர் தீபா வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    சர்வதேச யோகா தினத்துக்கு அ.தி.மு.க. தீபா அணியின் பொதுச் செயலாளர் தீபா வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தி வருமாறு:-

    சர்வதேச யோகா தினம் ஐக்கிய நாடுகளின் சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் உட்பட 190 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி அன்று சர்வதேச யோகா தினம் என்று அறிவித்து உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நமது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு கலைக்கு கிடைத்த வெற்றியாகும்.

    தமிழக மக்கள் நீண்ட காலமாக நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பண்டைய பழமொழிக்கேற்ப வாழ்ந்து வருபவர்கள். அந்த அடிப்படையில் உலக மக்கள் அனைவரும் உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்திட வேண்டும் என யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×