search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க விழிப்புணர்வு
    X

    நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க விழிப்புணர்வு

    நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க விழிப்புணர்வு நடத்தப்பட்டது. ஆய்வின்போது 13.550 கிலோ கிராம் எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் மத்தியில் விழிப்புர்ணவு ஏற்படுத்தும் பொருட்டு கலெக்டர் சங்கரின் வழிகாட்டுதலின்படி ஒரு நாள் ஒட்டுமொத்த கள ஆய்வு நகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக ஊட்டி நகராட்சியில் 2 குழுக்கள், குன்னூர் நகராட்சியில் 3 குழுக்கள், கூடலூர் நகராட்சியில் 1 குழு, நெல்லியாளம் நகராட்சியில் 2 குழுக்கள் மற்றும் பேரூராட்சிகளில் தலா ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் சுற்றுலா மற்றும் வெளியூர் வாகனங்களை ஆய்வு செய்து, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ததுடன் அதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் சார்ந்த துணிப்பைகளை வழங்கினர்.

    மேலும் ஆய்வின்போது தடைசெய்யப்பட்ட 13.550 கிலோ கிராம் எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்த அபராத தொகையாக மொத்தம் 16,250 வசூல் செய்யப்பட்டது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிக்கமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
    Next Story
    ×