search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் மீது பீர் தெளிப்பு: வாணியம்பாடி மதுக்கடை தற்காலிகமாக மூடல்
    X

    பெண்கள் மீது பீர் தெளிப்பு: வாணியம்பாடி மதுக்கடை தற்காலிகமாக மூடல்

    பெண்கள் மீது பீர் தெளித்த விவகாரம் குறித்து மதுபானக் கடையை தற்காலிகமாக 2 நாட்களுக்கு மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகரில் உள்ள வாரச்சந்தை மைதானம் அருகில் டாஸ்மாக் மதுபானகடை உள்ளது.

    அந்த பகுதியில் வேறு கடைகள் இல்லாததால் அங்கு எப்போதும் குடி மகன்கள் கூட்டம் நிரம்பி வழியும். இரவு நேரத்தில் போதை தலைக்கேறிய குடி மகன்கள் அந்த வழியாக சென்ற பெண்கள் மீது பீர் பாட்டியலை உடைத்து பீரை தெளித்துள்ளனர். இதனால் பெண்கள் அலறி அடித்து ஓடினர்.

    நேற்று முன்தினம் இரவு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் மதுக்கடையை அகற்றக்கோரி நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர்.

    நள்ளிரவில் மதுக்கடைக்கு எதிரான திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் வாணியம்பாடி தாசில்தார் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் முரளிகுமார் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி. சுந்தரம் முன்னிலை வகித்தார்.

    இதில் வாரச் சந்தை மைதானத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடை தற்காலிகமாக 2 நாட்களுக்கு மூடுவதாகவும், நிரந்தரமாக மூடுவது குறித்து கலெக்டரின் ஆலோசனை பெற்று 2 நாட்கள் கழித்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதையேற்ற பொதுமக்கள் 2 நாட்களில் கடையை மூடுவது குறித்து அறிவிப்பு வெளியாக விட்டால் மதுபானக் கடைக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவோம் என தெரிவித்தனர்.
    Next Story
    ×