search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அரசின் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தகுதி இல்லாத ஊழியர்கள் நியமனம்
    X

    புதுவை அரசின் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தகுதி இல்லாத ஊழியர்கள் நியமனம்

    புதுவை அரசின் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தகுதி இல்லாத ஊழியர்கள் நியமனம் என மத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் தணிக்கை துறை ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலத்தின் செயல்பாடுகள் மற்றும் வரவு- செலவு விவரங்களை தணிக்கை செய்து அறிக்கை வெளியிடுவது வழக்கம்.

    அதன்படி புதுவை அரசின் செயல்பாடுகள் தொடர்பாக தணிக்கை செய்து அதன் அறிக்கையை புதுவை சட்டசபையில் தாக்கல் செய்தது.

    பின்னர் அறிக்கை விவரங்களை நிருபர்களிடம் அதிகாரிகள் வெளியிட்டனர். அதில் கூறி இருந்த முக்கிய விவரங்கள் வருமாறு:-

    புதுவையில் 2014-15-ம் ஆண்டு 3 ஆயிரத்து 902 கோடியாக இருந்த மேம்பாட்டு செலவு 2015-16-ல் 4 ஆயிரத்து 166 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரூ.264 கோடி அதிக செலவாகி இருக்கிறது.

    2011-12-ல் 5 ஆயிரத்து 441 கோடியாக இருந்த நிலுவை நிதி தற்போது 7 ஆயிரத்து 754 கோடியாக உயர்ந்துள்ளது.

    புதுவை அரசின் மொத்த கடனில் 62.65 சதவீதத்தை அடுத்த 7 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டி உள்ளது. எனவே, புதுவை அரசு கடன் சுமையில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 778 தகுதி இல்லாத பணியாளர்களை நியமித்து இருக்கிறார்கள். அவர்களை ஆபரேசன் தியேட்டர் மற்றும் ஆய்வகங்களிலும் பணிக்கு அமர்த்தி உள்ளனர். இதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்பத்திரிக்கு மொத்தமே 399 ஊழியர்கள் தான் தேவை என்ற நிலையில் 778 பேரை நியமித்து இருக்கிறார்கள்.

    மருத்துவ கல்லூரிக்கு வழங்க வேண்டிய 434 கோடி நிதியில் ரூ. 265 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் கட்டமைப்பு பணிகள் முறையாக முடிக்கப்படவில்லை.

    மத்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெறுவதற்காக தவறான தகவல்களை கொடுத்துள்ளனர். 80 சதவீத உள்நோயாளிகள் இருக்க வேண்டிய நிலையில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×