search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம்: இயக்குனர் சந்திரபரிஜா தகவல்
    X

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம்: இயக்குனர் சந்திரபரிஜா தகவல்

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் நிறுவப்பட உள்ளதாக இயக்குனர் டாக்டர் சுபாஷ்சந்திர பரிஜா தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் நிறுவப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை ஜிப்மரின் அதிகார குழு வழங்கி உள்ளது.

    சுமார் 590 கோடி மதிப்பில் உருவாகும் இந்த மையம் சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. சிறுநீரகம், கல்லீரல், இருதயம், கணையம், எலும்பு, மஞ்ஞை உள்ளிட்ட பலதரப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இந்த மையம் மூலம் நடைபெறும்.

    இதில், மிக முக்கியமான 7 மருத்துவ துறைகள் மற்றும் உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையை சார்ந்த மேலும் 7 துறைகள் இணைந்து செயல்படும். இந்த மையத்தில் 200 படுக்கை வசதிகள் மற்றும் 65 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகள் இடம்பெறும்.

    இந்த மையத்தின் மூலம் உறுப்புகள் பிற மருத்துவமனைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும்.

    மேலும் டாக்டர்கள் மற்றும் உபமருத்துவ நிபுணர்களுக்கு உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சி வழங்கும் மையமாகவும் செயல்படும். மேலும் உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் தேவையான ஆராய்ச்சிகளையும் இந்த மையம் மேற்கொள்ளும்.

    இந்த தகவலை ஜிப்மர் இயக்குனர் டாக்டர் சுபாஷ்சந்திர பரிஜா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×