search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்
    X

    புதுவையில் ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்

    புதுச்சேரி மாநிலத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ந் தேதியோடு முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது.

    நாடு முழுவதும் இருந்து 545 எம்.பிக்கள், 4012 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். யூனியன் பிரதேசமான புதுவையில் மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    புதுவை சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் ஜனாதிபதி தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்வதற்கான தேர்தல் அலுவலர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பாக அறிவிப்பு இன்று சட்டப்பேரவை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் 15, என்.ஆர். காங்கிரஸ் 8, அ.தி.மு.க. 4, தி.மு.க. 2, சுயே 1 உள்பட 30 எம்.எல்.ஏக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
    Next Story
    ×