search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்: டி.ஐ.ஜி. உத்தரவு
    X

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்: டி.ஐ.ஜி. உத்தரவு

    விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அனிஷா உசேன் உத்தரவின் பேரில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் இன்ஸ்பெக்டர் பால்சுதர், மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கும், மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மயிலத்துக்கும், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவுக்கும், ரோசனை இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் கோட்டக்குப்பத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    செஞ்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி விழுப்புரம் பணியிடை பயிற்சி மையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ருக்மாந்தகன் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவுக்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜ் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்துக்கும், விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, கிளியனூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை பிரம்மதேசத்துக்கும், குமராட்சி இன்ஸ்பெக்டர் குமார் விழுப்புரம் கடும் குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த முருகேசன் புதுப்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    பதவி உயர்வு பெற்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் மீனாள் பண்ருட்டிக்கும், வள்ளி காடாம்புலியூருக்கும், தாரகேஸ்வரி கடலூர் மனித உரிமை பிரிவுக்கும், மணமல்லி விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவுக்கும், பாண்டி செல்வி கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, கடலூர் குற்ற ஆவணபதிவேடுகள் பிரிவுக்கும், கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் சீனிபாபு ரெட்டிச்சாவடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×