search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் - கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது
    X

    தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் - கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது

    ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்குகிறது.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ பி.எஸ்.எல்.பி. ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

    இந்த நிலையில் முதன் முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் தொழில்நுட்பத்துடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.

    இது இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்டது. அதாவது 640 டன் எடையுள்ளது. ஏற்கனவே இந்த ராக்கெட் 6 முறை விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நாளை (5-ந்தேதி) மாலை 5.28 மணிக்கு 7-வது முறையாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

    இந்த ராக்கெட் மூலம் 3 ஆயிரத்து 136 கிலோ எடை கொண்ட ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை 3.58 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் ‘இஸ்ரோ’ தலைவர் கிரண்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் நாளை (5-ந்தேதி) மாலை 3.58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

    இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய மைல் கல்லாகும்” என்றார்.
    Next Story
    ×