search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊசுடு தொகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: நாராயணசாமி வழங்கினார்
    X

    ஊசுடு தொகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: நாராயணசாமி வழங்கினார்

    ஊசுடு தொகுதியில் ரூ. 32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

    சேதராப்பட்டு:

    ஊசுடு தொகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள் விழா மற்றும் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பத்துக்கண்ணுவில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    முதல்-அமைச்சர் நிவாரணநிதியில் இருந்து 356 பயனாளிகளுக்கு மருத்துவ நிதி உதவியாக ரூ.14 லட்சத்து 24 ஆயிரமும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் 89 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகையாக தலா1.500 வீதம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 500-ம், 22 சலவை தொழிலாளர்களுக்கு சலவைபெட்டியும், 30 பயனாளிகளுக்கு சிறுவணிக கடனாக ரூ.15 லட்சம் என ரூ.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை இயக்குனர் மீனாகுமாரி, இணை இயக்குனர் தனலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுதுறை உதவி இயக்குனர் சுகந்தி மற்றும் ஊசுடு தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் அருணகிரி மற்றும் காங்கிரஸ்- தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×