search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 5-ந் தேதி ஏவப்படுகிறது
    X

    மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 5-ந் தேதி ஏவப்படுகிறது

    மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 5-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 5-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட் 640 டன் எடையை சுமந்து செல்லும் சக்தி கொண்டது. இந்த ராக்கெட்டை வருகிற 5-ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    இஸ்ரோ நிறுவனம் விண்ணுக்கு மனிதனை சுமந்து செல்வதற்காக 2009-ம் ஆண்டு மார்க்-3 ராக்கெட் தயாரிக்கும் பணியை தொடங்கியது. இந்த ரக ராக்கெட் தொடர்ந்து 6 முறை விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது.

    கடைசியாக 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3.7 டன் எடை கொண்ட விண்கலத்துடன் மார்க்-3 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ தயார்நிலையில் உள்ளது. ஆனால் மத்திய அரசு முறையான அனுமதி அளித்த பின்னர் தான் இதற்கான பணியில் இறங்கும்.

    இந்த வெற்றியை தொடர்ந்து வருகிற 5-ந் தேதி, மாலை 5.28 மணிக்கு 7-வது முறையாக மார்க் 3 ராக்கெட்டை சோதனை செய்து பார்க்க திட்டமிட்டு உள்ளோம். இதற்காக 43.43 மீட்டர் உயரமும், 4 மீட்டர் அகலத்திலும் ரூ.300 கோடியில் மார்க் 3 ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.வரும் காலங்களில் 3 இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்ப முடியும். அதுவும் பெண் ஒருவரை முதலில் விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×