search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்
    X

    விழுப்புரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்

    விழுப்புரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட மக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ளது கோலிப்பட்டு கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக இங்கு குடிநீர் விநியோகம் சீரான முறையில் இல்லை. இது குறித்து கோலிப்பட்டு மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திர மடைந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் நோக்கி காலிக்குடங்களுடன் இன்று சென்றனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கீழே அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதேப்போல் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்திலும் குடிநீர் விநியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    சின்னசேலம் காந்தி நகரில் 500-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு பேரூராட்சி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் சீரான முறையில் இல்லை. இதுகுறித்து காந்தி நகர் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் சின்ன சேலத்தில் உள்ள தட்டானூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×