search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் வைக்கோல் கிலோ ரூ.2-க்கு வழங்கப்பட்டது
    X

    விவசாயிகளுக்கு மானிய விலையில் வைக்கோல் கிலோ ரூ.2-க்கு வழங்கப்பட்டது

    பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் வறட்சி நிவாரண திட்டத்தின் மூலம் வைக்கோல் (உலர் தீவனம்) மானிய விலையில் வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    வேப்பந்தட்டை

    தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் போதிய தண்ணீரின்றி விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. இதன் காரணமாக கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் பச்சைபுல் மற்றும் வைக்கோல் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் வெளிமார்க்கெட்டில் வைக்கோல் கட்டு ஒன்றுக்கு ரூ.300 விலை கொடுத்து வாங்கி தங்களது மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் வறட்சி நிவாரண திட்டத்தின் மூலம் வைக்கோல் (உலர் தீவனம்) மானிய விலையில் வழங்க மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வேப்பந்தட்டை அரசு கால்நடை மருத்துவமனையில், விவசாயிகள் வளர்க்கும் மாடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு விவசாயிக்கும் 80 கிலோ முதல் 105 கிலோ வரை கிலோ ரூ. 2 விலையில் வழங்கப்பட்டது.

    இதனை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இதில் கால்நடை பராமரிப்புதுறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் செங்கோட்டையன், துணை இயக்குனர்கள் சுரேஷ், செல்வராஜ், வேப்பந்தட்டை கால்நடை மருத்துவர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×