search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்யல் பகுதிகளில் வெல்லம் விலை சரிவு
    X

    நொய்யல் பகுதிகளில் வெல்லம் விலை சரிவு

    நொய்யல் பகுதிகளில் உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளயம்:

    கரூர் மாவட்டம்,  நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள்  தங்களது விளைநிலங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் கரும்புகளை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் கரும்புகளை புகளுரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

    இந்த கரும்புகளை வாங்கும் ஆலைகள் கரும்புச்சாறுகள்  மூலம் அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் தயாரிக்கின்றன. அவை 30 கி.லோ. கொண்ட சிப்பங்களாக தயார் செய்யப்படுகின்றன.

    இந்த வெல்ல சிப்பங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, உத்ராஞ்சல், உத்திரப்பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ரூ.1400க்கும், 30கிலோ கொண்ட அச்சு வெல்லம்  ரூ.1400க்கும்  வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.  இந்த வாரம்  30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ரூ.1350 க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம்  ரூ.1300க்கும் வாங்கிச் சென்றனர். உற்பத்தி அதிகரிப்பின்  காரணமாக வெல்லம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
    Next Story
    ×