search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையின் பல இடங்களில் லேசான மழை - பலத்த காற்று வீசுகிறது
    X

    சென்னையின் பல இடங்களில் லேசான மழை - பலத்த காற்று வீசுகிறது

    அக்னி நட்சத்திரம் முடிந்த மறுநாளான இன்று சென்னையில் சேப்பாக்கம், பாரிமுனை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து மேலும் கடுமையாக வெயில் வாட்டியது. பருவ மழை பொய்த்திருந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. மற்ற ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கடுமையான வெயில் தாக்கம் இருந்ததாகவே அறியப்பட்டது.

    பெரும்பாலான நகரங்களில் 110 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வந்தது. இந்த நிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது. எனவே வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. 



    இந்நிலையில், சென்னை சேப்பாக்கம், பாரிமுனை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. காற்றுடன் அதிக வேகத்தில் வீசியது. 

    முன்னதாக அக்னி நட்சத்திரம் முடிவடைந்த மறுநாளான இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இருப்பினும் மாலை லேசான மழை பெய்துள்ளது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    Next Story
    ×