search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டு இறைச்சி தடை விவகாரத்தில் முதல்வருடன் இன்று ஆலோசிப்போம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
    X

    மாட்டு இறைச்சி தடை விவகாரத்தில் முதல்வருடன் இன்று ஆலோசிப்போம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

    மாட்டு இறைச்சி விவகாரத்தில் முதல்- அமைச்சருடன் பேசி தமிழக அரசின் நிலை குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் நகர அ.தி.மு.க. (அம்மா) அணி செயல் வீரர்கள் கூட்டத்துக்காக அமைச்சர் சீனிவாசன் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் விரைவில் இணையும். ஒரு வாரத்தில் நல்ல முடிவு எட்டும் என்று எதிர்பார்க்கிறோம். இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுப்போம். அடுத்து வரும் 4 ஆண்டுகள் மட்டுமின்றி 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியே தொடரும் என்றார்.

    மத்திய அரசு மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை செய்துள்ள விவகாரத்தில் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் எடுத்துள்ள நிலையைப் போல் தமிழகம் எந்தவித முடிவையும் அறிவிக்காமல் இருப்பது ஏன்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், இன்று சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அனைத்து அமைச்சர்களும் சந்தித்து கலந்து பேசி தமிழக அரசின் நிலை குறித்து தெரிவிப்போம் என்று கூறினார்.


    அதன் பின் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனது நிலையில் மாற்றமடைந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி எதை அறிவித்தாலும் அதற்கு எதிரான கருத்துகளையே தெரிவித்து வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டமன்றத்தில் வைக்கும் விவகாரத்தில் ஸ்டாலின் மற்றும் ராமதாசுக்கு தகுந்த பதிலடி தரும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்திருப்பது அ.தி.மு.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்று அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
    Next Story
    ×