search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டையார்பேட்டையில் குடங்களுடன் பெண்கள் மறியல்: தண்ணீர் லாரி சிறைபிடிப்பு
    X

    தண்டையார்பேட்டையில் குடங்களுடன் பெண்கள் மறியல்: தண்ணீர் லாரி சிறைபிடிப்பு

    குடிநீர் வழங்கக்கோரி தண்டையார்பேட்டையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தண்ணீர் லாரியை சிறைபிடித்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டையில் சாஸ்திரிநகர், கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கியுள்ளனர். அங்கு சில நாட்களாக குழாய்களில் குடிநீர் வரவில்லை.

    இதுகுறித்து பலதடவை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்களும், பொதுமக்களும் இன்று மதியம் எண்ணூர் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை மடக்கி சிறைபிடித்தனர். தகவல் அறிந்ததும் ஆர்.கே. நகர் போலீசார் விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் கவுதம் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக எண்ணூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×