search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை ரெயில் பாதை பணியால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    இரட்டை ரெயில் பாதை பணியால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    திருச்சி-திண்டுக்கல் இடையே உள்ள மணப்பாறை-கல்பட்டிச்சத்திரம் பகுதியில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) 31-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை திண்டுக்கல்-திருச்சி வழித்தடத்தில் செல்வதற்கு பதிலாக, திண்டுக்கல்-கரூர்-திருச்சி வழியாக திருப்பி விடப்படும். ஆகையால் திருச்சி ரெயில் நிலையத்துக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

    * நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) அடுத்த மாதம் 1-ந்தேதி திண்டுக்கல்-கரூர்-திருச்சி வழியாக திருப்பிவிடப்படும். இதனால் திருச்சிக்கு ஒரு மணி நேரம் 55 நிமிடம் தாமதமாக செல்லும்.

    * ஸ்ரீமாதாவைஷ்ணோதேவி கட்ராவில் இருந்து 29-ந்தேதி புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்(16788) மற்றும் கச்சுகுடாவில் இருந்து 31-ந்தேதி புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்(16353) கரூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், திண்டுக்கல் வழியாக திருப்பிவிடப்படும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து 7-ந்தேதி புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(16127) திருச்சி, கரூர் மற்றும் திண்டுக்கல் வழியாக திருப்பிவிடப்படும். இதனால் நெல்லைக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

    * மயிலாடுதுறை - நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 31-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை (வ.எண்.56821, 56822) திருச்சி-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×