search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
    X

    டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

    பூலாம்பாடியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரும்பாவூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பெரியம்மாபாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மதுகுடிப்போரால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தனியாக நடந்து செல்லும் போது தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. மேலும் கூலிவேலைக்கு செல்வோர் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்து மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருப்பதால் குடும்ப பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    எனவே பெரியம்மாபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பூலாம்பாடி மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி விளம்பர பதாகைகளையும் கையில் ஏந்தியபடி நின்றனர்.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக சம்பவ இடத்தில் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே டாஸ்மாக் தாசில்தார் பிரகாஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இன்னும் 3 வாரங்களில் டாஸ்மாக் கடையை பெரியம்மாபாளையம் ரோட்டிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×