search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
    X

    குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

    கீரனூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் குடநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி, காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    கீரனூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் குடநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி, காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் தங்கவேலு தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் முனியய்யா முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    கீரனூர் அருகே உள்ள குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட கடியாபட்டி, கலைக்குடிப்பட்டி, கேர்காலனி ஆகிய கிராம பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும், தா.கீழையூர், ராசாபட்டி உள்ளிட்ட ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குன்றாண்டார்கோவில், பெரம்பூர்விளக்கு, கிள்ளுக்கோட்டை பகுதிகளில் உள்ள டாஸ்மாக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கீரனூர் வட்டாட்சியர் கலைமணி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×