search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
    X

    சீர்காழியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    சீர்காழி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கை விட வேண்டும். உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்கா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாமு இனியவன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கிறிஸ்து பேரவை மாநில துணை அமைப்பாளர் தலித்தாஸ், ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து தாண்டவன்குளம், மாதானம், புதுப்பட்டினம், பட்டவிளாகம், காரைமேடு, நாங்கூர், இளையமதுகூடம் ஆகிய ஊர்களில் கட்சி கொடி கம்பத்தை சேதபடுத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும், ஆதி திராவிடர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வததை தவிர்க்க வேண்டும், சீர்காழி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்கவேண்டும், விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு வழங்கவேண்டிய பயிர்காப்பீட்டு தொகையினை வழங்கவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கை விட வேண்டும், கொள்ளிடம் ஆறு மற்றும் சீர்காழி உப்பனாறு உள்ளிட்ட ஆறுகளில் தடுப்பணை அமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் வேலு குணவேந்தன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், இளம் சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட அமைப்பாளர் அன்புசெல்வன், மகளிரணி நிர்வாகி ஞானவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார்.

    Next Story
    ×